இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அது தொடரை பாதிக்காது. ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி உள்ளதால் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது ராஞ்சி மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்த வேண்டுமா என்று பிசிசிஐ புலம்பும் அளவிற்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்தம் 39 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட ரஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியை காண வெறும் 1,500 டிக்கெட்டுகளே இதுவரை விற்றுள்ளன. இதனால் ராஞ்சியில் போட்டி நடத்த ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்ற அளவிற்கு பிசிசிஐ புலம்பி வருகிறது.
இந்நிலையில் நாளைய போட்டியை நேரில் காண தோனி ராஞ்சி மைதானத்திற்கு வர உள்ளார். மேலும் அவருடன் அவரது சிறுவயது நண்பர் மற்றும் ஜார்கண்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மிஹிர் திவாஹருடன் சேர்ந்து [போட்டியை ரசிக்கவுள்ளார். தற்போது ஓய்வில் உள்ள தோனி நாளை ரசிகர்களுடன் சேர்ந்து இந்திய அணியை உற்சாகப்படுத்த உள்ளார்.

தோனியின் வருகையால் நாளை மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் அதிகம் வெளியில் வராத தோனி நாளை ரசிகர்கள் மத்தியில் வர இருப்பதால் தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்



