எப்போதும் போல தனது ஸ்டைலில் அதிரடியாக ஓய்வை அறிவித்த தோனி – குவியும் வாழ்த்து

Dhoni-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 16 வருடங்கள் விளையாடிய தோனி இமயம் சரிந்தது என்பதற்கு ஏற்ப திடீரென தனது ஓய்வை அறிவித்துவிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்காக அனைவரும் தங்களது ஓய்வு வாழ்த்துக்களை தெரிவித்து பிரியா விடை கொடுத்து வருகின்றனர். எப்போதும் போல் யாரும் நினைக்காததை செய்யும் தன்மை கொண்டவர் தோனி.

Dhoni

- Advertisement -

2014ஆம் ஆண்டு இப்படித்தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடிக் கொண்டிருக்கும்போது திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து வெளியேறினார். மேலும், தனது கேப்டன் பதவியையும் விராட் கோலியிடம் கொடுத்தார். தொடர்ந்து யாரும் நினைக்காததை தான் செய்து வருகிறார் தோனி. அது போன்ற விஷயங்களிலும் அவர் சரியாக இருப்பார். இந்நிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையாக அறிவித்துள்ளார்.

தோனியின் இந்த முடிவினை நாம் யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டோம். அப்படித்தான் இதுவும் நடந்திருக்கிறது இதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரக்யான் ஓஜா, முகமது கைப், ஹர்திக் பாண்டியா போன்ற பல வீரர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

dhoni 2

தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 876 ரன்களை குவித்துள்ளார். மேலும் 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 274 ரன்கள் எடுத்துள்ளார் மேலும் 98 டி20 போட்டியில் விளையாடிய ஆயிரத்து 168 ரன்கள் குவித்துள்ளார்.

Dhoni-1

தோனியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.இருப்பினும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவது ஒரு ஆறுதலாக அமையும். சி.எஸ்.கே அணிக்காக தொடர்ந்து தோனி விளையாடுவார் என்று சி.எஸ்.கே நிர்வாகி காசி விஸ்வநாதன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement