கொட்டும் பனியில் பனிச்சிற்பம் செய்து விளையாடும் தோனி மற்றும் அவரது மகள் – வீடியோ இதோ

Ziva

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி எனது ஓய்வு முடிவு குறித்தும் எனது கிரிக்கெட் குறித்தும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலியும் தோனியின் ஓய்வு குறித்த முடிவு அவரே தீர்மானிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரிலும் இந்திய அணியில் தோனிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்தாலும் தோனி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவே நேரத்தை செலவிட்டு வருகிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது தோனி மற்றும் அவரது மகள் மற்றும் அவர் மனைவி ஆகியோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு பறந்துள்ளனர். அங்கு கொட்டும் பனியில் அவர்கள் விளையாடும் வீடியோவினை தோனியின் மனைவி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.