தனது அப்பா, அம்மா மற்றும் மனைவியுடன் ராஞ்சி பள்ளிக்கு வந்து ஓட்டு போட்ட தோனி – வைரலாகும் வீடியோ

Sakshi

ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் தோனி மற்றும் அவரது மனைவி அவரது அப்பா அம்மா என குடும்பத்துடன் மகேந்திர சிங் தோனி அங்குள்ள பள்ளிக்கு ஓட்டு போட வந்திருந்தார்.

டிசம்பர் 12 ஆம் தேதியான இன்று மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு ஜார்கண்ட் முழுவதும் 17 தொகுதிகளுக்கு நடைபெற்றது. ராஞ்சி பகுதியில் உள்ள ஐந்து தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று ராஞ்சியில் உள்ள பள்ளி வாக்குச் சாவடியில் தோனி தனது குடும்பத்துடன் வருகை தந்து சொந்த ஊரில் அவரது பதிவு செய்தார்.

மேலும் பள்ளியில் தனது ஓட்டினை பதிவு செய்த பின் வெளியே வந்ததும் ரசிகர்கள் தோனியை பார்த்த மகிழ்ச்சியில் கோஷமிட்டனர். அவர்களைப் பார்த்து சிரித்தபடி உடனே அங்கிருந்து வெளியேறினார். தோனியின் இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.