திருமணமான சாஹல் மற்றும் அவரது மனைவியை துபாய்க்கு அழைத்து விருந்து வைத்த தோனி

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சாகல் இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இதுவரை 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள 30 வயதாகும் சாகல் கடந்த சில ஆண்டுகளாகவே தனஸ்ரீ என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்கள் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் தங்களது நிச்சயதார்த்தை சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்தனர்.

மேலும் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட சாஹலை காண தனஸ்ரீ அங்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் இவர்கள் இருவரும் காதலித்து வர மறுபக்கம் சாகல் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். கொரோனா பாதிப்பினால் லாஃக் டவுனுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தார்.

- Advertisement -

அதன்பிறகு தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியுடன் பயணித்த அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி முடித்த கையோடு நாடு திரும்பி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அவரது காதலியை திருமணம் செய்து கொண்டார். அவரது இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அவருக்கான வாழ்த்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் குவிந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் புதுமணத்தம்பதிகள் ஆகிய இவர்கள் இருவரையும் துபாய்க்கு அழைத்து பிரம்மாண்டமான இரவு டின்னர் ஒன்றினை ஏற்பாடு செய்து அவர்களுக்கு ட்ரீட் வைத்தனர். மேலும் இந்த தகவலை சாகல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.

அவர்கள் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. மேலும் தற்போது ஹனிமூனில் இருக்கும் இவர்களை துபாய்க்கே சென்று அவர்களுக்கென தனி விருந்துக்காக அழைத்து தோனி செய்த இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement