சென்னை இஸ் மை செகன்ட் ஹோம். இதெல்லாம் சும்மா பேச்சுக்கு தானா ? – 2 ஆவது வீடை தோனி எங்கு கட்டுறாரு தெரியுமா ?

Sakshi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு கேப்டனாக டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்த ஒரே ஒரு கேப்டனாக இவர் இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

zivadhoni

- Advertisement -

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுகட்ட முடியாத ஒரு பினிஷராக அவர் வலம் வந்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டை தாண்டி 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டோனி அந்த ஆண்டில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 13 சீசன்களாகவும் தொடர்ச்சியாக சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

எப்பொழுதும் ஐ.பி.எல் பின்னர் “சென்னை எனக்கு இரண்டாவது வீடு” போன்றது என தோனி கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த அளவிற்கு தமிழகத்தில் தோனியின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். சர்வதேச அளவில் தோனிக்கு பலகோடி ரசிகர்கள் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள தோனி ரசிகர்கள் அந்த அளவிற்கு வெறித்தனமான அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். எந்தவொரு நிலையிலும் தோனியை சென்னை ரசிகர்கள் விட்டுக்கொடுத்ததில்லை.

எப்பொழுதும் “சென்னை இஸ் மை செகண்ட் ஹோம்” என்று கூறும் தோனி தற்போது எங்கு தனது இரண்டாவது வீட்டை கட்டி வருகிறார் தெரியுமா ? ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனி தற்போது ராஞ்சி ரிங் ரோட்டில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் தனது பண்ணை வீட்டை அமைத்து அதில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஆனால் தற்போது அவர் இரண்டாவதாக கட்டும் சென்னையில் அல்ல. மாறாக மும்பையில் கட்டி வருகிறார்.

Ziva

கடற்கரை அழகை ரசித்தவாறு கட்டப்படும் இந்த வீடு வெகுவிரைவில் முடியும் என்றும் இது ஒரு கனவு வீடு என்று தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விரைவில் இந்த வீடு தயாராகிவிடும் என்றும் இந்த வீடு எங்கள் இருவருக்குமே கனவு வீடு என்று சாக்சி பதிவிட்டுள்ளார். இதனால் தோனி தனது இரண்டாவது வீட்டை மும்பையில் கட்டி வருவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement