ஒரு டெஸ்ட் சரியா ஆடலைனா…தவான நீக்குவீங்களா..? கடும்கோபத்தில் முன்னாள் இந்திய வீரர்.!

dhawan-out
- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாதா தவான், முதல் டெஸ்ட் போட்டியில் படு மோசமாக விளையாடினார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதற்கு இந்திய அணியின் .முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

gavaskar

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பர்மிங்ஹாமில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அதிகமான வாய்ப்பு இருந்தும் 31 ரன்கள் விதியாசத்தில் தோல்வியடைந்தது.இந்த போட்டியின் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் தவான், முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 13 மட்டுமே குவித்திருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஷிகர் தவாணை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது ‘எதன் அடிப்படையில் ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றதும் அணியிலிருந்து நீக்குவதற்கு, ஏன் அவரை இங்கிலாந்து தொடருக்கு அழைத்து செல்ல வேண்டும்,

Dhawan

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தவாணை நீக்கியது எனக்கு உடன்பாடில்லை, எப்போதும் அவர் மட்டும் தான் பலியாடாகி விடுகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல், முரளி விஜய் போன்ற வீரர்களை விட தவான் சிறப்பாக தான் ஆடினார். அவரை அணியில் இருந்து நீக்கியது முற்றிலும் தவறு ‘ என்று காட்டமாக கூறியுள்ளார். ஏற்கனவே, தவான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சுனில் கவாஸ்கர் ‘ ஷிகர் தவான் தனது ஆடும் ஸ்டைலை மாற்றியமைக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார் போல அவர் ஆட்டத்தை மாற்றியமைத்தால் தான் அவரால் சிறப்பாக விளையாட முடியும் இல்லை என்றால் அவரால் ரன் குவிக்க முடியாது. ” என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement