இவங்க 2 பேர் தான். மேட்ச்ச 15 ஓவர்லயே முடிச்சி கொடுத்துட்டாங்க – கேப்டன் தவான் மகிழ்ச்சி

dhawan 1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கருணரத்னே 43 ரன்களையும், கேப்டனான ஷனகா 39 ரன்களை குவித்தனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

chahal

- Advertisement -

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. குறிப்பாக பிரித்வி ஷா 24 பந்துகளில் 43 ரன்களையும், இஷான் கிஷன் 48 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையை 86, 31 ரன்கள் குவித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தனர். இறுதியில் 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 263 ரன்கள் குவித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் : எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் நல்ல முதிர்ச்சி அடைந்து உள்ளனர். எங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உதவியது என்பதால் பத்தாவது ஓவர் முதலில் எங்களது மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர்.

dhawan 2

அதே போன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போது இளம் வீரர்கள் பேட்டிங்கை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாம் இருப்பதே நம்முடைய பலம் ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு விளையாடினார்களோ அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகின்றனர். ப்ரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. முதல் 15 ஓவர்களிலேயே அவர்கள் போட்டியை முடித்துக் கொடுத்து விட்டார்கள்.

shaw

இன்னும் சிலர் ரன்கள் இருந்திருந்தால் என்னுடைய சதம் வந்து இருக்கும் ஆனால் ரன்கள் குறைவாக இருந்ததால் நான் நாட் அவுட்டாக இருக்க விரும்பினேன். சூரியகுமார் யாதவ் விளையாடுவதை பார்க்கையில் எளிதாக விளையாடுவது போல் தோன்றுகிறது. எனவே நான் என்னுடைய பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த விரும்புகிறேன் என வெற்றி குறித்து ஷிகர் தவான் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement