அணியில் இடம்கிடைப்பது பற்றி எந்த கவலையும் இல்லை. தெனாவட்டாக பேசிய – இந்திய வீரர்

IND

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நாளை மறுதினம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

Cup

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து தொடருக்காக அந்நாட்டிற்கு செல்ல உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மா அணிக்குள் வருவதால் ராகுல் மற்றும் தவான் ஆகியோருடைய நிலை என்ன என்று இன்று தெரியவரும்.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் துவக்க வீரர் தவான் கூறியதாவது : நமது அணியில் 3 வீரர்களும் டாப் ஆர்டரில் பிரமாதமாக ஆடி வருகிறோம். ரோஹித்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. ராகுலும் கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக ஆடி வருகிறார் அவர் ஒரு அருமையான ஆட்டக்காரர்.

rahul

காயத்திற்கு பிறகு மீண்டும் நானும் என்னுடைய வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன். எனவே நான் அணியில் இருப்பினும் இல்லையோ என்பதெல்லாம் என் தலை வலி கிடையாது. அது என் கையில் இல்லை ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -