இலங்கை வீரர்களுடன் நான் நீண்ட நேரம் பேசிய விடயங்கள் இவைதான் – கேப்டன் தவான் வெளிப்படை

Dhawan

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் 3வது டி20 போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது. துவக்க வீரரான கேப்டன் தவான் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியில் மற்ற எந்த பேட்ஸ்மேனாலும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

INDvsSL

சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மட்டும் 23 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்நிலையில் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி அல்லது 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த டி20 போட்டியில் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹஸரங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் தவான் நீண்ட நேரம் இலங்கை அணி வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அது குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் இலங்கை அணியின் அனைத்து வீரர்களையும் வைத்து என்ன பேசினார் என்பது குறித்த கேள்வி அதிகளவு எழுந்துள்ள நிலையில் அந்த சம்பவம் குறித்து பேசிய தவான் கூறுகையில் :

போட்டி முடிந்தவுடன் இலங்கை அணி வீரர்கள் என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் நடந்த நான் சந்தித்த அனுபவங்களை பற்றி அறிந்து கொள்வதற்காக என்னை அறிவுரை கூற அழைத்தனர். நானும் அவர்களிடம் சென்று என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

- Advertisement -

அவர்களுடன் நான் பேசியதை அவர்கள் மகிழ்ச்சியுடன் கேட்டார்கள் என்று நினைக்கிறேன் என கூறினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த தருணங்களையும், அற்புதமான நிகழ்வுகளையும் தவான் தனது அனுபவத்திலிருந்து பகிர்ந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement