
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 167 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சேவாக்கிற்கு அடுத்து ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோரது கூட்டணி மிகவும் வெற்றிகரமான கூட்டணியாக அமைந்தது.
இடதுகை துவக்க ஆட்டக்காரராக அற்புதமான மாற்றத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அடுத்ததாக துவங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அம்பாசிடராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியிருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் கான், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் மற்றும் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி ஆகியோரும் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானபோது தோனியின் தலைமையின் கீழ் விளையாடிவது குறித்து தவான் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி எப்போதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்தக் கூடியவர். வீரர்களிடம் அதிகம் பேசவும் மாட்டார் அதுவே தோனியின் பலமாக இருந்தது.
இருந்தாலும் தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அப்போதே அவர் மிகப்பெரிய வீரராக மாறி சாதனைகளையும் நிகழ்த்தி விட்டார். தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்குமே அவரின் கண்களைப் பார்த்தால் பயப்படுவார்கள். அவர் சத்தம் போட்டு ஒருபோதும் நான் பார்த்ததில்லை அதுதான் அவருடைய பலம் ஆனால் அவர் கண்களை பார்க்கும் போது நீங்களே பயப்படுவீர்கள் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் புதிய முடிவை கையில் எடுத்த ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
மேலும் விராட் கோலி குறித்து பேசிய தவான் கூறுகையில் : தோனியை காட்டிலும் விராட் கோலி முற்றிலும் வித்தியாசமான ஆற்றல் கொண்டவர். இந்திய அணிக்குள் பிட்னஸ் கலாச்சாரத்தை முழுவதுமாக கொண்டு வந்தது விராட் கோலி தான் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.