ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் மகத்தான சாதனை படைத்த தவான் – விவரம் இதோ

Dhawan-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை மைதானத்தில் துவங்கியது.

dhawan

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி விளையாடி வருகின்றது. இதுவரை இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை அடித்துள்ளது. அதிரடி வீரரான ரோஹித் 10 ரன்களில் ஆட்டமிழக்க தவான் மற்றும் ராகுல் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் தவான் ஒருநாள் தொடரில் போட்டிகளில் தனது 28 ஆவது அரை சதத்தை கடந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த போட்டியில் தவான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை அவர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

dhawan 2

25 ரன்களை இந்த போட்டியில் தவான் எட்டியபோது ஆயிரம் ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்து இந்த மகத்தான சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார். மேலும் துவக்க வீரர்கள் இடையே இந்திய அணியில் நடைபெற்றுவரும் கடுமையான போட்டி சூழலில் தற்போது சிறப்பாக விளையாடி வருவது அவரது இடத்தை நீட்டிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -