சதத்தை தவறவிட்டாலும் அட்டகாசமான சாதனையை செய்து அசத்திய தவான் – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கொழும்பு மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 95 பந்துகளுக்கு 86 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடக்கம். இந்த ரன் குவிப்பின் மூலம் தற்போது தவான் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை பின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அந்த சாதனையை யாதெனில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்த வீரராக கேப்டன் கோலி திகழ்கிறார். இந்த சாதனையை அவர் 136 இன்னிங்ஸ்களில் எட்டினார். அதே சாதனையை தற்போது தவான் தனது 140 வது இன்னிங்சில் இலங்கை அணிக்கெதிரான இந்த போட்டியின் மூலம் நிகழ்த்தியுள்ளார்.

Dhawan 1

மேலும் உலக அளவில் இந்த சாதனையை வேகமாக செய்த 4வது வீரர் என்ற பெருமையையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகமாகி அரை சதம் அடித்த 6 ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக வடேகர், ரவிசாஸ்திரி, சச்சின், அஜய் ஜடேஜா, தோனி ஆகியோர் கேப்டனாக முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளனர்.

அதேபோன்று இந்திய வீரர்களில் பத்தாவது வீரராக இவர் 6000 ரன்களை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement