இந்திய அணியில் இவர் எனக்கு பொண்டாட்டி மாதிரி. அஷ்வினிடம் கலகலப்பாக பேசிய தவான் – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள. மேலும் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் துவங்கயிருந்த ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் தற்போது ஓய்வு நேரத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதில் செலவிட்டு வருகின்றனர்.

dhawan 3

- Advertisement -

மேலும் வீரர்கள் தங்களுக்குள்ளேயும் நேரலையில் சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினுடன் நேரலையில் பேசினார். இதில் கிரிக்கெட் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார் ஷிகார் தவான்.

இந்திய அணியில் தனது சிறந்த பார்ட்னர் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்ட தவான் அந்த வகையில் முரளி விஜய் உடனான இவரது பிணைப்பு குறித்து பேசினார். முரளி விஜய் குறித்து அவர் பேசுகையில் : முரளி விஜய் ஒரு அருமையான கேரக்டர். மைதானத்தில் மட்டுமல்ல வெளியிலும் எனக்கு ரொம்பவே நெருக்கமான நபர்.

Vijay

முரளி விஜய் தான் அவர் ஒரு அருமையான வீரர். ரொம்ப அமைதியான கூலான கேரக்டர் நான் எப்பொழுது அவருடன் இருந்தாலும் கலகலப்பாக இருக்கும். நிறைய முறை அவரிடம் நீ என் பொண்டாட்டி மாதிரி என்பேன். அவரும் சிரித்துக் கொண்டே சென்று விடுவார். நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய போது சிறிய தவறுகள் ஏற்பட்டால் சிறிது நேரம் பேசிக்கொள்ள மாட்டோம்.
பிறகு சரியாகிவிடும்.

- Advertisement -

சில நேரங்களில் முரளி விஜய்யை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அவரைப் புரிந்துகொள்ள நாம் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். அவருடன் விளையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நாங்கள் இருவரும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய உள்ளோம் .மேலும் இன்னும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

Vijay

நீண்ட நாள் கழித்து அவரை பார்க்கும்போதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவருடன் மீண்டும் பேசி சிரிக்கவும் ஆவலாக இருக்கிறேன் என்று ஷிகர் தவன் கூறினார். ஏற்கனவே முரளிவிஜய் அளித்திருந்த பேட்டியில் தான் டின்னர் செல்ல விரும்பினால் இந்திய வீரர்களில் ஷிகர் தவானை அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் அவருடன் பேசினால் கலகலப்பாக இருக்கும் என்றும் முரளி விஜயும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement