ரோஹித் சொல்றமாதிரி எனக்கு பயம் கிடையாது. அப்படி இருந்த 8 வருஷம் எப்படி ஆடியிருப்பேன் – தவான் பதிலடி

Dhawan
- Advertisement -

ஷிகர் தவான் மட்டும் ரோகித் சர்மா ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றது. அந்த தொடரை வெல்ல தொடக்க வீரர்களாக இருந்த இருவரும் மிகப்பெரிய காரணமாக அமைந்தனர் . அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 107 போட்டிகளில் இருவரும் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.

Dhawan-1

- Advertisement -

இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதிகமாக பரிச்சயமானவர்கள். இந்நிலையில் ஷிகர் தவான் ஆடுகளத்தில் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வார் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் உடன் சமூக வலைத்தளத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது. இந்த விஷயங்களைப் பற்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

ஷிகர் தவானை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அவர் தனக்கென்று ஒரு சில விதிகளை வைத்துக்கொண்டு ஆடுவார். சுழற்பந்து வீச்சாளர்களை ஆடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை விரும்பமாட்டார். முக்கியமான நேரத்தில் நாம் சொல்வதை காதில் வாங்கவே மாட்டார்.

dhawan 2

பின்னர் கடைசியாக வந்து என்ன சொன்னாய் என்று கேட்பார். நமக்கு அந்த நேரத்தில் கடுப்பாகிவிடும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. இந்த இரண்டு ஜோடிகளும் இந்திய அணிக்காக 107 போட்டிகளில் ஆடி 4800 குவித்துள்ளனர். சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் வரலாற்றில் இந்த இருவரும்தான் மிக சிறந்தவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

சேவாக் – சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி- சச்சின் டெண்டுல்கர், கௌதம் காம்பீர் – விரேந்தர் சேவாக் ஆகிய மூன்று ஜோடிகளையும் தாண்டி இவர்கள் இருவரும் அதிகமாக சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான துவக்கத்தை தொடர்ந்து அளித்து வருகிகின்றனர்.

Dhawan

இந்நிலையில் ரோகித் சர்மா தான் வேகப்பந்துவீச்சாளர் கண்டு முதலில் பேட்டிங் செய்ய தயங்குவதாக கூறிய கருத்துக்கு பதிலளித்துள்ள தவான் லைவ் சேட்டில் இர்பான் பதானிடம் இது குறித்து கூறுகையில் : நான் முதல் பந்தை ஆட விரும்ப மாட்டேன் என்பது உண்மைதான் ஆனால் ஃபாஸ்ட் பவுலர்களை எதிர் கொள்ள விரும்ப மாட்டேன் என்பதெல்லாம் கிடையாது. அந்த கருத்துக்கு நான் உடன்பட மாட்டேன். ஏனெனில் நான் ஓபனிங் பேட்ஸ்மேன் இந்திய அணிக்காக 8 ஆண்டுகளாக துவக்க வீரராக விளையாடி வருகிறேன்.

Dhawan 1

பாஸ்ட் பவுலர்களை ஆடாமல் எப்படி இத்தனை ஆண்டுகள் விளையாடி இருப்பேன். முதல் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளாமல் இருந்தாலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆடியிருக்க வேண்டும் அல்லவா அதனால் பாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள விரும்பாமல் இருக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. முதல் பந்தை ஆட விரும்பவில்லை அதனை நான் நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன். மேலும் ப்ரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் துவக்க வீரராக என்னுடன் களமிறங்கினாலும் நிச்சயம் நானே முதல் பந்தை எதிர் கொள்வேன் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement