நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியினர் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் பழிதீர்த்தனர். இந்த தொடரில் அனுபவ வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய மைனஸ் ஆக அமைந்தது என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரும் 21ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் இளம் வீர ரான ராகுல் ஆட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. இந்த தொடரில் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 204 ரன்களை அவர் சேர்த்து இருந்தார் அதில் அவர் ஒரு அருமையான சதமும் அடங்கும்.
இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் ராகுல் குறித்து ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : சிறப்பாக விளையாடினார்கள். அற்புதமான சதம் சகோ உறுதியுடன் முன்னேறுங்கள். இந்த வகையில் பேட்டிங் செய்தால் 12 ஆவது வீரராக நீங்க கூட சதம் அடிப்பீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தவானுக்கு பதிலாக ராகுலை அந்த இடத்தில் கொண்டு வருவார்களா ? என்ற கேள்வி எழும் நிலையில் தவான் ராகுலை பாராட்டி இருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



