கேள்விக்குறியான இந்திய அணியின் முன்னணி வீரரின் இடம் – விவரம் இதோ

IND

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்ததாக அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவானின் இடம் தற்போது டி20 கேள்விக்குறியாகியுள்ளது.

dhawan

ஏனெனில் பங்களாதேஷ் அணிக்கெதிரான இந்த டி20 தொடரில் ஓரளவு சுமாராகவே விளையாடிய தவான் ஸ்ட்ரைக் ரேட்டும் பெரியதாக இல்லை. மேலும் இந்த வருடம் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 272 ரன்கள் குவித்துள்ளார். ஆவ்ரேஜ் 22 ரன்கள் மேலும் ஸ்ட்ரைக் ரேட் 110 தான் இந்தவருடம் முழுவதுமாக இருந்துள்ளது.

எனவே அவரது இடம் தற்போது அவசியமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஏனெனில் இளம் வீரர்களின் ஆதிக்கத்தினாலும், தற்போது மூன்றாவது இடத்தில் வரும் ராகுல் சிறப்பாக ஆடி வருவதால் தவானின் துவக்கவீரர் இடம் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தொடக்க வீரராக ராகுலின் ரெகார்ட் சிறப்பாக உள்ளது.

கோலி மீண்டும் அணிக்கு திரும்பினால் ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்காது என்று கருதப்படுகிறது. ஏனெனில் நான்காம் இடத்திற்கு ஏற்கனவே ஐயர் சிறப்பாக விளையாடி வருவதால் ராகுல் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பார். அவ்வாறு அவர் இருக்கும் பொழுது வலது கை இடது கை என்ற காம்பினேஷனால் இதுநாள்வரை இடம்பெற்றுவந்த தவானுக்கு பதில் நல்ல பார்மில் இருக்கும் ராகுலுக்கு துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனால் தற்போது தவானின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -