நான் விளையாடியவரை இவரே கடினமான பவுலர். இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நான் பயப்படுவேன் – தவான் ஓபன் டாக்

Dhawan

ஷிகர் தவான் இந்திய அணியின் நட்சித்திர தொடக்க வீரராக இருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து துவக்க வீரராக இருந்து வருகிறார். அதிலும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து ரோஹித்தும் ஐவரும் வேறலெவல் துவக்கத்தை அளித்து வருகின்றனர். இடதுகை ஆட்டக்காரர் ஆன இவர் பெரும்பாலும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். எவ்வளவு அதிரடியான பேட்ஸ்மேனாக இருப்பினும் ஒருசில பந்துவீச்சாளர்களை எதிர் கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

dhawan 3

அந்த வகையில் ஷிகர் தவானிற்கும் ஒருசில பந்துவீச்சாளர்களை எதிர் கொள்வது சற்று கடின்ம்தான். கொரோனா பாதிப்பின் காரணமாக தனது வீட்டில் இருந்த படியே வேலைகளை செய்து வீடியோவாக வெளியிடும் தவான் அவ்வப்போது சமூகவலைத்தளம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது நேரலை ஒன்றில் பேசிய ஷிகர் தவான் தனது கிரிக்கெட் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக யார் பந்து வீசினால் அவரை எதிர் கொள்வது மிகவும் கடினம் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் : ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசினால் அச்சுறுத்தலாக இருக்கும். அவரை எதிர் கொள்வதும் மிக கடினம் தான்.

Starc

ஏனெனில் நல்ல உயரமான பந்துவீச்சாளரான அவர் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களை தனது திறமையால் எளிதில் வீழ்த்த கூடியவர் அவர். அவரை எதிர்கொள்வது எனக்கு சற்று எப்போதும் அச்சுறுத்தல் தான் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான். அதுமட்டுமின்றி அவரது வேகம் மற்றும் ஸ்விங் என்னை பெரிய அளவில் சோதிக்கும். தற்போது உள்ள பவுலர்களில் நான் இவரின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே சிரமப்படுவேன் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தவான் இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகளிலும் 136 ஒருநாள் போட்டிகளிலும் 61 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் . இதில் அனைத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 9500 ரன்கள் குவித்துள்ளார். மொத்தமாக 24 சதங்களும், 44 அரை சதங்கள் விளாசியுள்ளார். சமீபகாலமாக டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் மட்டுமே இவர் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

dhawan

காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அவரின் துவக்க வீரரின் இடத்தில் ,மாயங்க் அகர்வால் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது காயத்தில் இருந்து மீண்ட தவான் தனது பார்மை வெளிப்படுத்த காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.