கேள்விக்குறியான தவானின் ஓப்பனிங் இடம். தட்டி பறிக்கப்போகும் வீரர் இவர்தான் – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷா இடம்பெற்று விளையாடி வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தற்போது தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

dhawan

- Advertisement -

இந்நிலையில் ஷிகார் தவானின் டி20 போட்டியின் ஆட்டத்திறனும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே அவர் டி20 போட்டிகளில் பொருத்தம் இல்லாதவர் எனவும் அவருக்கு பதிலாக அந்த இடத்தை அகர்வாலுக்கு கொடுக்கலாம் என்றும் கோரிக்கை இந்திய அணி நிர்வாகத்திடம் வலுத்து வருகிறது. அதற்கு காரணம் யாதெனில் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் அகர்வால் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி வருகிறார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி என்றால் அவர் ஒருநாள் மற்றும் டி20யில் இன்னும் அதிரடியாக ஆடுவார் என்று அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கதேச தொடருக்கு அடுத்து வரும் மேற்கிந்திய தீவு தொடரில் ஒரு வேளை ரோகித் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக அகர்வால் துவக்கவீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

agarwal 3

ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து சென்று விளையாட இருக்கும் இந்திய அணி தயாராகும் வகையில் ரோகித் சர்மாவுக்கு சிறப்பு ஓய்வு அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடத்தில் தற்போது மயங்க் அகர்வால் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை கணக்கில் கொண்டு அகர்வாலை துவக்க வீரராக பயன்படுத்திப் பார்க்க இந்திய அணி நிர்வாகம் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது.

Agarwal-2

ஏனெனில் அனைத்து வகையான ஷாட்களையும் சிறப்பாக ஆடும் அகர்வால் ஏராளமான உத்திகளை கையில் வைத்துள்ளார். எனவே அவர் சிறப்பான தொடக்கத்தை அனைத்து போட்டியிலும் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் மீது ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் துவக்க வீரராக களமிறங்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement