இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் துவக்க வீரர் தவானும் இடம் பெற்றிருந்தார். இந்த விடயம் சர்ச்சையாக மாறியது ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தவானின் மோசமாகவே ஆடினார். மேலும் அது மட்டுமின்றி உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி தொடரிலும் பெரிய அளவு ரன்களை அடிக்க முடியாமல் அவுட் ஆகி வருகிறார்.
அதுமட்டுமின்றி சையது முஷ்டாக் அலி காலில் காயமும் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் எவ்வாறு சிறப்பாக ஆட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அவர் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் டி20 தொடரில் இருந்து மட்டும் அவர் நீக்கப்படுவார் அல்லது ஒருநாள் தொடரையும் சேர்த்து நீக்கப்படுவாரா என்று தெரியவில்லை.
ஆனால் அவரது நீக்கம் குறித்த எந்த தகவலும் தற்போது முழுமையாக தெரியவில்லை இருப்பினும் தவான் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரராக அணியில் சாம்சன் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.