வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய இந்திய வீரர் – அதிரடி அறிவிப்பு

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த டி20 தொடர் முடித்து வரும் 15ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடதுகை துவக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற்று இருந்தார். ஆனால் சையது முஷ்டாக் அலி தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டி20 போட்டியில் விளையாட முடியாமல் போனது.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்தும் தவான் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Dhawan

அதன்படி பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் : தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் தவான் காயம் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறது. மேலும் தையல் காரணமாக காயம் குணமடைய கூடுதல் நேரம் எடுக்கும் என்றும் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஒருநாள் தொடரில் இருந்து தவான் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தனக்கு பதிலாக டி20 போட்டியில் சாம்சன் அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

samson

அப்படி அவர் அணியில் இடம்பெற்றாலும் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வரும் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் சாம்சன் தேர்வு செய்யப்பட்டால் பண்டிற்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கிடைப்பது ஓரளவுக்கு உறுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.