காயத்தில் இருந்து மீண்ட தவான் அசத்தல். ரஞ்சி போட்டியில் விளாசல் – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் இடதுகை துவக்க வீரரான ஷிகர் தவான் சையத் முஷ்டாக் அலி கோப்பையின் போது கால் முட்டியில் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு கால் முட்டி பகுதியில் 25 தையல்கள் போடப்பட்டன. இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் தொடங்குவதற்கு முன்னர் காயம் முழுமையாக கூட முடியாத காரணத்தால் அவர் அந்த தொடரில் இருந்து விலகினார்.

Dhawan

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு பதிலாக ராகுல் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த தவான் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தொடங்கிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஷிகர் தவான் டெல்லி அணிக்காக கேப்டனாக விளையாடினார். காயத்தில் இருந்து மீண்ட தவான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 207 பந்துகளில் 140 ரன்களை குவித்தார். இதில் 19 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.

Dhawan 1

இதன் மூலம் தான் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி விட்டதை தனது ஆட்டத்தின் மூலம் தவான் வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வந்தார். இந்நிலையில் ராகுலிடம் தவானின் வருகையால் என்னவாகும் என்பது கேள்விக்குறிதான்.

Advertisement