Shikhar Dhawan : நியூசிலாந்து போட்டியில் தவான் பங்கேற்பதில் சிக்கல் – விவரம் இதோ

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Dhawan
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Bhuvi

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் கோலி, தோனி, பாண்டியா மற்றும் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடி வருவதால் அடுத்தடுத்த போட்டிகளை காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கல் உண்டாகி உள்ளது. அது யாதெனில் கடந்த ஆஸ்திரேலியா போட்டியின்போது தவான் குல்டர் நைல் வீசிய பந்தில் பெருவிரலில் அடிபட்டார். அந்த காயம் தற்போது விரலில் வீக்கமடைந்து உள்ளதாகவும் அதற்காக இன்று தவானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhawan

ஒருவேளை காயம் குணமடையாமல் வீக்கமாகவே இருந்தால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்க மாட்டார். இருப்பினும் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் அதற்குள் காயம் சரியாகி தவான் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement