அடக்கடவுளே தவானுக்கு இப்படி ஒரு நிலைமையா ? இப்படி இருந்த தவான் இப்படி ஆயிட்டாரு – விவரம் இதோ

Dhawan
- Advertisement -

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரரான தவானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

dhawan 1

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வரும் தவான் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வருவதால் அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தற்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இந்திய தேசிய அணியின் துவக்க வீரராக இருக்கும் தவான் இவருக்கு தற்போது தற்போது இந்திய ஏ அணியில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் மோசமான பார்மில் இருக்கும் இவர் மீண்டும் தனது பார்மை மீட்டெடுக்க இந்திய ஏ அணியில் விளையாட வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரை இணைத்துள்ளது. காயமடைந்த விஜய் ஷங்கருக்கு பதிலாக தவான் இந்தியா ஏ அணியில் இணைந்துள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கடைசி இரு போட்டிகளுக்கான அணியில் தவான் இடம் பெற்றுள்ளார். என்னதான் சர்வதேச போட்டியில் தொடக்க வீரராக இருந்தாலும் சில தடுமாற்றம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரிவை காண்பார்கள் என்பதற்கு தவான் ஒரு சிறந்த உதாரணம்.

Advertisement