காலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம் இது ?

Dhawan

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ind 1

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர சில உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மூலம் இந்த தொடருக்கான தேர்வு நேற்று நடந்தது.

இந்தத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஒருநாள் அணிக்கான வீரர்களின் விவரம் மற்றும் டி20 தொடருக்கான வீரர்களின் விவரம் வெளியாகியது. அதன்படி கேப்டனாக மீண்டும் விராட்கோலி தொடர்கிறார். ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தொடர்கிறார்.

இந்நிலையில் நேற்று வெளியான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் பார்ம் இன்றி தவிக்கும் தவான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி தற்போது சையது முஷ்டாக் அலி தொடரில் தவானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்ற அவர் இந்தத் தொடரில் இடம்பெற மாட்டார் என்று நினைத்த நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

agarwal 3

ஆனால் அவருக்கு பதிலாக நன்றாக விளையாடும் மயங்க் அகர்வால் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றமான தேர்வாக பார்க்கப்படுகிறது.