Shikhar Dhawan : நான் இல்லை என்றால் என்ன. இவர்கள் நிச்சயம் இதனை செய்வார்கள் – தவான் உருக்கம்

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையாட

Dhawan-1
- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Dhawan

- Advertisement -

அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனாலும் தவான் காயம் குணமடைந்து நிச்சயம் விளையாடுவார் என்று கோலி தெரிவித்தார். அதனால் தவானுக்கு பதில் ராகுல் துவக்க வீரராகவும் விஜய் சங்கர் 4மிடில் ஆர்டரிலும் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் தவானின்
காயம் குணமுடைய இன்னும் நாட்கள் அதிகரிக்கும் என்பதால் தவானை அதிகாரபூர்வமாக அணியில் இருந்து வெளியேற்றியது பி.சி.சி.ஐ

தற்போது தவான் இந்திய அணியில் இருந்து வெளியேறியதை அடுத்து தனது ரசிகர்களுக்காக வீடியோ பதிவு ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ பதிவு. எதிர்பாராத விதமாக எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது நம் நாட்டிற்காக உலக கோப்பை தொடரில் விளையாட விரும்பினேன்.

ஆனால் தற்போது சிகிச்சைக்காக திரும்ப வேண்டி உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளுக்கு நான் தயாராக வேண்டும் எனவே நான் அணியில் இல்லை என்றாலும் நமது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி உலக கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவை நமது இந்திய அணிக்கு தாருங்கள் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று உருக்கமாக தவான் அந்த வீடியோவில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement