மே.இ தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தவான் மற்றும் விஜய் நிலை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Shankar
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Dhawan

- Advertisement -

இந்தத் தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த தவான் மற்றும் விஜய் ஷங்கர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தவான் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் உலக கோப்பை தொடரில் இருவரும் காயம் காரணமாக விலகினார்கள். இந்நிலையில் தவானுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பரிசோதனை முடிந்தது. அவர் கையில் எலும்பு முறிவு சரியானதா என்று சோதிக்கப்பட்டது. காயம் ஆறி விட்டதா இல்லையா என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

Shankar

மேலும் அதே போல விஜய் ஷங்கரும் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்றார். அவருக்கும் காயத்தின் தன்மை குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்கள் இருவரது மருத்துவ அறிக்கை வந்த பின்னரே அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இல்லையா என்பது நாளை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement