இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார் ? மோதலில் இருக்கும் 2 பேர் – பி.சி.சி.ஐ யின் முடிவு என்ன ?

IND

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை மாதம் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெறும் என பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. மேலும் இந்தியாவின் முதன்மை அணியானது இந்நேரத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ள நிலையில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவில் இருக்கும் இளம் இந்திய அணி பங்கேற்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக முன்னணி வீரர்கள் யாரும் இன்றி இளம் படை இலங்கை சுற்றுப்பயணத்திற்கு செல்ல தயாராகும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் இந்திய அணியை தலைமை தாங்கி கேப்டனாக செயல்பட போவது யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரை தவறவிட்டது மட்டுமின்றி இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருக்கிறார்.

- Advertisement -

அவர் காயத்திலிருந்து குணமடையும் பட்சத்தில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைக்கு ஐயர் தயாராகி வருவதற்கு வாய்ப்பில்லை என்பதனால் இலங்கை அணிக்கு புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற விவாதத்தில் பி.சி.சி.ஐ இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக இருவருக்கு கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிகிறது.

Dhawan 1

இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி கூறுகையில் : ஷிகர் தவான் தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி 8 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் அவர் நிச்சயம் இந்த சுற்றுப்பயணத்தில் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அதே வகையில் ஹர்டிக் பண்டியாவும் இந்தப்போட்டியில் உள்ளார்.

- Advertisement -

pandya

ஏனெனில் சமீபகாலமாக அவர் பௌலிங் செய்யாமல் இருந்தாலும் பேட்டிங்கில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஒருவேளை கேப்டனாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தவான் மற்றும் பாண்டியா ஆகிய இருவரில் யாரை கேப்டனாக நியமிப்பது என்று பிசிசிஐ யோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement