ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி – ரெய்னா ஜோடியை முந்தி சூப்பர் சாதனை படைத்த – தவான் மற்றும் கோலி

Raina
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா – இந்தியா ஆகிய அணிகள் மோதி வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்த போதிலும் மோசமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாக இந்த தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்தியா வைட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக கேப் டவுன் நகரில் நடந்த கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது.

Rahul-toss

288 ரன்கள் இலக்கு:
இதை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் மாலன் 1, கேப்டன் பவுமா 8, மார்க்கம் 15 ஆகிய டாப் வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் 70/3 என தடுமாறிய தென்ஆப்பிரிக்காவை தூக்கி நிறுத்திய மற்றொரு தொடக்க வீரர் குவின்டன் டி காக் 130 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 124 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இவருடன் டுஷன் 52 ரன்கள், மில்லர் 39 ரன்கள் எடுக்க 300 ரன்களை தொடும் நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தீபக் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

vander dussen

இந்தியா தோல்வி:
இதை தொடர்ந்து 288 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவின் கேப்டன் ராகுல் 9 ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்த ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் இந்தியாவின் வெற்றிக்காக போராடினார்கள்.
இதில் தவான் 65 ரன்களிலும், கோலி 61 ரன்களில் அவுட்டான பின் ரிஷப் பண்ட் டக் அவுட், ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்கள், சூரியகுமார் யாதவ் 39 ரன்கள் என இந்தியாவின் மிடில் ஆர்டர் மீண்டும் வெற்றியை நழுவ விட்டது. கடைசி நேரத்தில் தீபக் சஹர் தனி ஒருவனாக 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

விராட் கோலி – ஷிகர் தவான் ஜோடி சாதனை :
இந்த போட்டி மட்டுமல்லாது இந்த தொடர் முழுக்க இந்தியாவின் டாப் ஆர்டரில் விளையாடிய ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதை மிடில் ஆர்டர் பயன்படுத்த தவறியதால் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.

dhawan

இப்போட்டியில் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்கள் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 50 க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த 3வது இந்திய இடது – வலது கை ஜோடி” என்ற முன்னாள் வீரர்களான “எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா” ஜோடியை முந்தி புதிய சாதனை படைத்தனர்.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய இடது – வலது கை ஜோடிகள்:

இதையும் படிங்க : 3 ஆவது போட்டியிலும் நாங்கள் சந்தித்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – கே.எல் ராகுல் வருத்தம்

1. ரோஹித் சர்மா – ஷிகர் தவான் : 32
2. சௌரவ் கங்குலி – ராகுல் டிராவிட் : 29
3. ஷிகர் தவான் – விராட் கோலி : 28
4. எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா : 27

Advertisement