மே.இ தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி, தவான் அவுட். அவர்களுக்கு பதிலாக இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Dhoni Dhawan
- Advertisement -

இந்திய அணி நடப்பு நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை மற்றும் நாளைமறுதினம் (17 மற்றும் 18ம்) தேதிகளில் கலந்தாலோசிக்கப்பட்டு இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரியவந்துள்ளது. தவான் காயத்தில் இருந்து மீண்டு விட்டாரா என்பதும் இந்த தொடரில் தோனிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினம் என்றே தெரிகிறது.

Dhawan-1

இந்நிலையில் இந்த தொடரில் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கு பதிலாக இளம் வீரர்கள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement