எல்லா பாலையும் அடிக்கனுன்னு நெனச்சா இப்படித்தான் அவுட் ஆகி வெளிய போவ – இளம்வீரரை திட்டிய தவான்

dhawan 1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அசலங்கா 65 ரன்களையும், பெர்னாண்டோ 50 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஆனது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ப்ரித்வி ஷா 13 ரன்கள், தவான் 29 ரன்கள், இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

deepak 2

- Advertisement -

பின்னர் எளிதாக இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி விடும் என்று எதிர்பார்த்த நிலையில் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பாட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மனிஷ் பாண்டே 37 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற அடுத்து வந்த ஹார்திக் பாண்டியா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் போட்டி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பின்னால் வந்த க்ருனால் பாண்டியா 35 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார்.

அதன் பின்னர் இறுதியில் தீபக் சாகர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் : மைதானம் ரன் குவிப்பிற்கு ஏற்ற வகையில் இருந்தால் சற்று நிதானத்துடன் ஆடி பிறகு ரன்களை அடிக்க வேண்டும்.

deepak

ஏனெனில் எல்லா போட்டியும் ஒரே மாதிரி இருக்காது. முதல் போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடி எளிதாக வெற்றி பெற்றுவிட்டோம். இரண்டாவது போட்டியிலும் ஆக்ரோஷமாக விளையாட முற்பட்டு அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினோம். இனி வரும் போட்டிகளில் ஆவது டி20 போல விளையாடாமல் துவக்கத்தில் நிதானம் காட்டி பிறகு அதிரடியாக விளையாடுங்கள் என்று தவான் இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

shaw

தவான் கூறியதற்கு பின்னால் உள்ள அர்த்தம் யாதெனில் இந்திய அணியின் தொடக்க வீரரான ப்ரித்வி ஷா ஆரம்பம் முதலே பந்தை அடிக்க மட்டுமே ஆசைப்பட்டு 11 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசரங்கா பந்தில் போல்டானார். அடிக்கவே முடியாத பந்தில் அவர் ஷாட் விளையாட ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அவர் சுட்டிக்காட்டி ப்ரித்வி ஷாவுக்கு மறைமுகமாக அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement