இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்க உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் மோதுகிறது.

சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு அந்த தோல்வியிலிருந்து வெளிவரும் விதமாக இந்த தொடரில் வெற்றியுடன் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலக அளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி பாதிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதனால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதனை மைதான நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது இன்னுமொரு சிக்கல் இன்றைய போட்டியில் ஏற்பட உள்ளது. அதன்படி தர்மசாலா மைதானத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் மழையால் போட்டி பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்று பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் மாலை நேரத்தில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நேற்றும் பயிற்சியின்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான். அதேபோன்று கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டி தர்மசாலாவில் நடைபெற்றபோது மழையால் முழு போட்டியும் விளையாடாமல் ரத்தானது.

எனவே இந்த முறையும் அதே போன்று நடக்குமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் மைதான நிர்வாகிகள் மழை பெய்தாலும் சரியான முறையில் மழை நீரை வடிகட்ட ஏற்பாடுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



