- Advertisement -
ஐ.பி.எல்

தோனி ஒரு லெஜெண்ட்.. அவர மாதிரி சிஎஸ்கே அணிக்காக நானும் இதை செய்ய விரும்புறேன்.. ப்ரேவிஸ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி கொல்கத்தாவில் 57வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை போராடி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரகானே 48, மனிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர்.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய சென்னை அணிக்கு உர்வில் பட்டேல் அறிமுக போட்டியிலேயே அடித்து நொறுக்கி 31 (11) ரன்கள் எடுத்தார். ஆனால் அவரைத் தவிர்த்து கான்வே, ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 60/5 என ஆரம்பத்திலேயே சென்னை தடுமாறியது.

- Advertisement -

பிரேவிஸ் வெறித்தனம்:

அப்போது ஒரே ஓவரில் 30 ரன்கள் தெறிக்க விட்ட தேவால்ட் பிரேவிஸ் மொத்தம் 52 (25) ரன்கள் எடுத்து வெற்றியை சென்னை பக்கம் கொண்டு வந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சிவம் துபே 45, தோனி 17*, கம்போஜ் 4* ரன்கள் அடித்து கடைசி ஓவரில் சென்னைக்கு 3வது வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

அதனால் தோல்வியுற்ற கொல்கத்தா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் வைபவ் அராரோ வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என 30 ரன்கள் விளாசிய பிரேவிஸ் போட்டியை தலைகீழாக மாற்றி அரை சதத்தை அடித்தார். அப்படிப்பட்ட அவரை அடுத்த ஓவரிலேயே கொல்கத்தா அணியின் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கி அசத்தினார்.

- Advertisement -

வருணுக்கு 2 தண்டனை:

ஆனால் அப்போது தன்னுடைய சுட்டு விரலை நீட்டிய வருண் செய்கையில் “கிளம்பு கிளம்பு” என்ற வகையில் காட்டி பிரேவிஸை பார்த்து விக்கெட்டை கொண்டாடினார். இந்நிலையில் அந்த செய்கையின் வாயிலாக ஐபிஎல் 2.5 விதிமுறையான “ஒரு பவுலர் மொழி, செயல் அல்லது சைகையை வைத்து அவுட்டாகும் பேட்ஸ்மேனை சீண்டுவது. இது அவுட்டாகும் பேட்ஸ்மேனிடமிருந்து ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டும் திறன் கொண்டது” என்ற விதிமுறையை வருண் சக்கரவர்த்தி மீறியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இப்படியா காலை வருவீங்க.. 2008க்குப்பின் 2வது சிஎஸ்கே ஜோடியாக ஆயுஷ் – கான்வே மோசமான சாதனை

அதனால் இப்போட்டியின் சம்பளத்திலிருந்து அவருக்கு 25% அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அத்துடன் வருண் சக்கரவர்த்திக்கு ஒரு கருப்பு புள்ளி வழங்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த கருப்பு புள்ளிகளின் எண்ணிக்கை 5 தொடும் போது தாமாகவே அந்த வீரர் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -