சவுரவ் கங்குலி 25 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசி அறிமுக வீரர் – யார் இந்த டேவான் கான்வே

Conway

நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவான் கான்வே 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். டேவான் கான்வே தனது முதல் போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

conway 1

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அசத்தலான சாதனையுடன் துவங்கிய உள்ள டேவான் கான்வே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டு கால பழமையான ரெக்கார்ட் ஒன்றினை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாரெனில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமாகி இதுவரை 6 பேர் அறிமுகப் போட்டியில் சதம் அடித்துள்ளனர்.

- Advertisement -

அப்படி சதமடித்த அறிமுக வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தான் அதிக ரன்களை குவித்த வீரராக இருந்தார். கடந்த 1996ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சௌரவ் கங்குலி அறிமுகப் போட்டியில் 136 ரன்களை சேர்த்திருந்தார். இதுவே இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

conway 2

இந்நிலையில் தற்போது 25 ஆண்டுகள் கழித்து கங்குலியின் இந்த சாதனையை நேற்று டேவான் கான்வே முறியடித்தார். நேற்றைய போட்டியின் ஆட்ட நேர முடிவில் வரை 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த இவர் இதன்மூலம் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

conway 3

29 வயதான டேவான் கான்வே 2020ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாகி 14 போட்டிகளில் 473 ரன்களையும், 2021 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 3 போட்டிகளில் 225 ரன்கள் அடித்து சிறப்பான சராசரி வைத்திருந்ததால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தலான சதத்தை விளாசியுள்ள இவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement