தல தோனிக்கு மட்டுமல்ல. தோனியோடு சேர்ந்து 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இளம் வீரர் – யார் தெரியுமா ?

Padikkal
- Advertisement -

ஜூலை 7ஆம் தேதி என்று தெரிந்தவுடன் நம் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது தல தோனியின் பிறந்த நாள் தான். இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் தல தோனிக்கு உலகெங்கிலுமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தோனியோடு சேர்த்து இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரும் தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், அவருக்காகவும் தற்போது வாழ்த்துக்கள் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dhoni-4

- Advertisement -

இந்நிலையில் அந்த இளம் வீரர் யார் என்ற தகவலை நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதன்படி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் தனது கேரியரை துவங்கிய தேவ்தத் படிக்கல் தான் பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தின் மூலம் எமர்ஜிங் பிளேயேர் விருதினையும் தட்டி சென்றிருந்தார்.

இதுவரை 21 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள படிக்கல் 668 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கும் அவர் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இன்று தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடும் இளம் வீரருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமின்றி பி.சி.சி.ஐ யும் இலங்கை தொடருக்காக அவர் வலைப் பயிற்சியில் தயாராகி வரும் ஒரு வீடியோவை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement