
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியிலிருந்து திலக் வர்மா வயிற்றுப் பிரச்சனையால் முதல் 3 போட்டிகளில் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் முதல் 3 போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அதைப் பார்க்கும் ரசிகர்கள் “கடவுள் இருக்கான் குமாரு” என்ற வகையில் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை முக்கிய பங்காற்றினார். அதே வேகத்தில் ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.
அத்துடன் கேப்டனாக பஞ்சாப்பை அவர் 11 வருடங்களுக்கு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதன் காரணமாக 2025 ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் அவருக்கு துணைக் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பரிந்துரையில் திடீரென அவரை அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விட்ட அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்தனர்.
இத்தனைக்கும் 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி தடுமாறிய அவரை இந்திய அணி ஏற்கனவே கழற்றி விட்டிருந்தது. இருப்பினும் திடீரென ரோஹித் சர்மாவுக்கு பின் அவரை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த தேர்வுக்குழு டி20 அணியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தது. அதை வைத்துக்கொண்டு 3 சதமடித்திருந்த சஞ்சு சாம்சனை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 18 இன்னிங்ஸில் அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் வேறு வழியின்றி அவரை கடைசி நேரத்தில் 2026 டி20 உலகக்கோப்பை அணியிலிருந்தே தேர்வுக்குழு கழற்றி விட்டது. மறுபுறம் கழற்றி விடப்பட்டதற்காக கவலைப்படாத ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவில் சந்தித்த காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்து விளையாடத் துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: நிதிஷ் ரெட்டிக்கு அக்சர் பட்டேல் குறைஞ்சவரா? இந்தியா ஜெய்க்க அவங்க 2 பேரும் சேந்து ஆடனும்.. ஃகைப்
அதன் காரணமாக திலக் வர்மாவுக்கு பதிலாக நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஒருவேளை அந்த வாய்ப்பில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 2026 டி20 உலகக் கோப்பையில் அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது. குறிப்பாக 2026 டி20 உலகக் கோப்பைக்குள் திலக் குணமடையாமல் போனால் ஸ்ரேயாஸ் தேர்வாக வாய்ப்புள்ளது. இதிலிருந்து கம்பீர், அகர்கர் செய்த அநியாயத் தேர்வை விதி உடைத்துள்ளது என்றால் மிகையாகாது.