டெல்லி அணியின் ஹோம் கிரவுண்ட் விசாகபட்டினமா? இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

CSK-vs-DC
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளில் அதிக சாதகத்தை பெறுவது வழக்கம். ஏனெனில் ஹோம் கிரவுண்டில் விளையாடும் போது மைதானத்தின் தன்மை மற்றும் ரசிகர்களின் ஆதரவு என சில விடயங்கள் ஹோம் கிரவுண்டில் விளையாடும் வீரர்களுக்கு சாதகமாக அமையும். அந்தவகையில் சி.எஸ்.கே அணியும் சேப்பாக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான 13 ஆவது லீக் போட்டியானது மார்ச் 31-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியானது டெல்லி அணியானது தனது ஹோம் கிரவுண்டில் விளையாட வேண்டிய போட்டியை விசாகப்பட்டினத்தில் விளையாடியது.

- Advertisement -

இப்படி ஹோம் கிரவுண்டில் விளையாட வேண்டிய போட்டியை டெல்லி அணி விசாகப்பட்டினத்தில் விளையாடியது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

அந்தவகையில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் பாதி ஆட்டங்கள் டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. அதனால் மைதானம் பெருமளவு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதன் காரணமாக ஆடுகளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்போதைக்கு அங்கு போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஐ.பி.எல் நிர்வாகம் டெல்லி அணியை ஹோம் கிரவுண்டை விருப்பப்படி மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க : 4, 6, 4, 6.. கடைசி ஓவரில் வெளுத்த தல தோனி.. ரகானே, மிட்சேல் போராடியும் 2 தவறால் சிஎஸ்கே தோற்றது எப்படி?

அதன் பின்னர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாகம் தங்களது ஹோம் கிரவுண்டாக சில போட்டிகளை விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாட சம்மதம் தெரிவித்தது. பின்னர் 2024 ஐ.பி.எல் தொடரின் பிற்பகுதியில் மீண்டும் டெல்லி மைதானத்தில் அந்த அணி விளையாடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement