- Advertisement -
ஐ.பி.எல்

IPL 2023 : இந்த வருஷம் டெல்லி அணியின் கேப்டன் இவர்தான். அணி நிர்வாகம் வெளியிட்ட – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது மார்ச் 31-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கவுள்ள வேளையில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது முழு அளவில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதிலும் பங்கேற்க மாட்டார் என்பதனால் அந்த அணி புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஒரு ஆண்டு விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகிது.

- Advertisement -

அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக தற்போது டெல்லி அணி தங்களது புதிய கேப்டனை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் இம்முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தலைமை தாங்குவார் என்று அணி நிர்வாகம் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு போட்டிகளில் டெல்லி அணியை வழிநடத்திய அவர் இந்த சீசன் முழுவதும் டெல்லி அணியை வழிநடத்த உள்ளார் என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லி அணிக்காக விளையாடியிருந்த டேவிட் வார்னர் அதன்பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்டார். அவரது தலைமையில் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இப்போ நம்ம டீமுக்கு தேவையே அந்த மாதிரி பிளேயர்ஸ் தான். அது உங்களால முடியும் – எல்.பாலாஜி ஓபன்டாக்

இந்நிலையில் கடந்த சில சீசன்களுக்கு முன்னர் அவரது ஆட்டம் சற்று தொய்வடைந்த வேளையில் சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் தற்போது டெல்லி அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இம்முறை அவரது தலைமையில் டெல்லி அணி விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -