தோல்விக்கு இதுவே காரணம். அடுத்தமுறை இந்த தவறு நடக்காது – தெ.ஆ கேப்டன் டிகாக் பேட்டி

De Kock 1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

toss

- Advertisement -

இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிகாக் கூறியதாவது : எங்களுடைய துவக்கம் சரியாக இருந்தாலும் நாங்கள் முடிவில் அதை சரியாக கொண்டு செல்லவில்லை. எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக வீசினார்கள் இருப்பினும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாங்கள் இந்த இலக்கினை கொண்டு இந்திய அணியை வீழ்த்துவது சற்று சிரமமான விஷயம்தான்.

புதிய வீரர்கள் அணிக்கு வந்திருப்பதால் அவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற உலகத்தரமான இந்திய அணிக்கு எதிராக அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்றே நான் நினைக்கிறேன். இந்த மைதானத்தில் பந்து கூடுதல் வேகம் இருந்ததால் அது இந்திய அணியின் பேட்டிங்க்கு கைகொடுத்தது.

Kohli 1

நான் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் அவசரப்பட்டு அவுட்டாகி விட்டேன் அடுத்தமுறை இதுபோன்று நடக்காது. இன்றைய போட்டியில் நாங்கள் மோசமான பேட்டிங்கை செய்தோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இது போன்று அடுத்து வரும் போட்டிகள் நடக்காது என்று டிகாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement