இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று மூன்றாவது நாளாக விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தற்போதுவரை 5 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள்எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சார்பாக துவக்க வீரர் எல்கர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தற்போதுவரை எல்கர் 152 ரன்களுடனும் டிகாக் 83 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் ஒரு சுவாரசியமான நிகழ்வைப் பற்றி தற்போது பார்ப்போம். அது யாதெனில் இந்திய அணியின் தொடக்க வீரரான அகர்வால் முதல் இன்னிங்சில் 215 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதில் என்ன சுவாரஸ்யம் என்று பார்க்கிறீர்களா இருக்கிறது அகர்வால் சதம் அடித்த பிறகு மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து தனது முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார். அப்போது இரட்டை சதம் அடித்த பிறகு தென்னாபிரிக்காவின் கீப்பரான டிகாக் அகர்வாலிடம் சென்று அவரது பேட்டை வாங்கி பார்த்தார். இந்த விடயத்தை கண்ட இந்தி ரசிகர்கள் பேட்டை என்ன பார்க்கிறீர்கள். அதில் என்ன இருக்கிறது ? என்று என்பது போல தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வை இந்திய அணி நிர்வாகம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இந்த செய்தி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.