நான் மட்டும் விளையாடிருந்தால் அசால்ட்டாக 15 கோடிக்கு ஏலம் போயிருப்பேன் – முன்னாள் இந்திய ஜாம்பவான்

IPL
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப்புகழ் பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும் என்பதால் ஐபிஎல் தொடங்கிய ஒரு வாரத்திற்கு பின்பு தான் ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறும். ஆனால் இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடரை 65 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வருடத்தின் ஐபிஎல் தொடங்கிய 2-வது நாளே 2 போட்டிகள் நடைபெற்றன.

IPL 2022

- Advertisement -

அசத்தி வரும் ஐபிஎல்:
அந்த வகையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி மற்றும் 5 முறை கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயித்த 178 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி ஒரு கட்டத்தில் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அதிரடியால் யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென கடைசி நேரத்தில் அபார வெற்றி பெற்று மும்பைக்கு ஷாக் கொடுத்தது. அதேபோல் இரவு நடந்த 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் ஒரு கட்டத்தில் வெற்றி பெறுமா என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த அணியின் ஓடின் ஸ்மித் வெறும் 8 பந்துகளில் 25* எடுத்து யாருமே எதிர்பாராத வண்ணம் அற்புதமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

மொத்தத்தில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி ரசிகர்களுக்கு அடுத்தடுத்த த்ரில் தருணங்களை கொடுத்து வருகிறது. இந்த தொடரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் அபாரமாக செயல்பட்டு தங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு மும்பை அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்த இளம் வீரர் இஷான் கிசான் அந்த அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியில் 81* ரன்களை விளாசி அசத்தினார்.

shastri

அசால்ட்டாக 15 கோடி வாங்கிருப்பேன்:
இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தமது காலத்தில் நடந்திருந்தால் 15 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு தம்மை வாங்கிய அணிக்கு இதேபோல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருப்பேன் என இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி நீண்ட நாட்களுக்குப் பின் வர்ணனையாளராக ஐபிஎல் தொடரில் பணியாற்ற துவங்கியுள்ள அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “எந்தவித சந்தேகமும் இன்றி கண்டிப்பாக 15 கோடிக்கு விலை போயிருப்பேன். அதுவும் ஏதோ ஒரு அணியின் கேப்டனாக வாங்கப்பட்டிருப்பேன். இதை ஒன்றும் நான் முட்டாள் தனமாக கூறவில்லை” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல ஒருவேளை அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தால் 15 கோடிக்கு தகுதியானவரா என்று பார்த்தால் கண்டிப்பாக தகுதியானவர் என்றே கூற வேண்டும். ஏனெனில் 80களில் இந்திய கிரிக்கெட்டில் முக்கிய வீரராக வலம் வந்த அவர் 80 டெஸ்ட் போட்டிகளில் 3830 ரன்களையும் 151 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 3108 ரன்களை எடுத்த அவர் 129 விக்கெட்டுகளை எடுத்து அந்த கால கட்டங்களில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வலம் வந்தார். குறிப்பாக 1983-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் அவரும் முக்கிய பங்காற்றினார்.

1983

வர்ணனையாளராக ரவி சாஸ்திரி:
அதேபோல் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு அவர் ஒத்து வருவாரா என்று பார்த்தால் கண்டிப்பாக பொருந்துவார். ஏனெனில் ஒரு ஆல்ரவுண்டரான இவர் அதிரடியாக பேட்டிங் செய்வதிலும் திறமை படைத்துள்ளார். குறிப்பாக ஒரு ரஞ்சி கோப்பை போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த அவர் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட முதல் இந்திய வீரர் என்ற சரித்திர சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்குப் பின் 80களில் தனது திறமையால் மிகவும் புகழ்பெற்ற ஒரு முன்னணி இந்தியா வீரராக ரவிசாஸ்திரி ஜொலித்தார்.

- Advertisement -

எனவே ஒரு ஆல்-ரவுண்டராக விளங்கிய அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தால் கண்டிப்பாக மவுசு இருந்திருக்கும் என்பதால் 15 கோடிக்கும் மேல் விலை போயிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 80களில் இந்திய கிரிக்கெட்டில் மகத்தான ஆல்-ரவுண்டராக வலம் வந்த அவர் 90களில் ஓய்வு பெற்ற பின்பு வர்ணனையாளராக அவதாரம் எடுத்து தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஈர்த்தார்.

இதையும் படிங்க : தயவு செஞ்சு இனி 205 ரன்களை மட்டும் அடிக்காதிங்க ப்ளீஸ், பெங்களூருவிடம் கெஞ்சும் ஆர்சிபி ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

அதன்பின் 2017 – 2021 வரையிலான காலகட்டங்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டதால் வர்ணனை செய்ய முடியாமல் இருந்து வந்தார். தற்போது அந்த பதவிலிருந்து விலகியதை அடுத்து மீண்டும் வர்ணனையாளராக ரசிகர்களை மகிழ்விக்க தொடங்கியுள்ளார்.

Advertisement