- Advertisement -
ஐ.பி.எல்

என்னால் தான் தினேஷ் கார்த்திக் அந்த முடிவை எடுத்தார்.. எமோஷனலாக பேசிய – தீபிகா பல்லிகல்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியின் போது ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய ஆர்.சி.பி அணியானது தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த ஆண்டாவது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் அந்த போட்டியுடன் தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதோடு களத்தில் இருந்த வீரர்களும் அவருக்கு முன்னின்று மரியாதை செலுத்தி கௌரவமாக வழி அனுப்பினார்.

- Advertisement -

அதேபோன்று மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஆரவாரத்துடன் தினேஷ் கார்த்திக்கை வழி அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகல் எமோஷனலாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் நான் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அவரைப்போன்று அனைவராலும் விரும்பப்படும் ஒரு வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. தினேஷ் கார்த்திக் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் என்னுடனும் எனது குழந்தைகளுடனும் அதிக நேரத்தை செலவிடுவார்.

இதையும் படிங்க : தூங்கிய வங்கதேசத்தை எழுப்பிட்டாங்க.. யாரும் பெருசில்ல.. 3 வாரத்தில் தனது கருத்தை வாபஸ் பெற்ற ஷாகிப்

என்னுடைய வற்புறுத்தினால்தான் தினேஷ் கார்த்திக் இந்த ஓய்வு முடிவை எடுத்தார் என எமோஷனலாக தீபிகா பல்லிகல் கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று விராட் கோலியும் தினேஷ் கார்த்திக் உடனான தனது முதல் சந்திப்பு குறித்து இந்த பதிவில் பேசியிருந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

- Advertisement -