தோனி அளித்த இந்த வாக்குறுதியே நான் இந்திய அணியில் விளையாட காரணம் மனம் திறந்த – தீபக் சாஹர்

deepak

இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் டி20 அணியில் இளம் வீரரான தீபக் சாஹர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் தீபக் சாஹர் தான் இந்திய அணிக்கு தேர்வானது குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

chahar

இந்திய அணியில் இடம் பிடித்து ஆட வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்டநாள் இருந்தது. அதனைப் போன்றே தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து ஆடி வருகிறேன். நான் இந்திய அணியில் இடம்பிடிக்க முக்கிய காரணமாக தோனியையே கருதுகிறேன். ஏனெனில் அவர் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது நெட் ப்ராக்டீஸில் என்னை சந்தித்தார்.

அப்போது என்னுடைய பேட்டிங் குறித்து என்னிடம் பேசிய அவர் என்னுடைய பேட்டிங் நன்றாக இருப்பதாகவும், மேலும் தொடர்ந்து என்னை பயிற்சி செய்யும் படியும் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு சென்னை அணியில் தடைக்கு பிறகு மீண்டும் திரும்பியபோது என்னை சென்னை அணியில் எடுப்பேன் என்று கூறினார். அதேபோன்று என்னை தேர்ந்தெடுத்து எனக்கான வாய்ப்புகளை அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் வழங்கினார்.

chahar1

நானும் சிறப்பாக பவுலிங் செய்தேன். தோனி என்னை அணியில் விளையாட வைப்பேன் என்றும் மேலும் எனக்கான வாய்ப்பு கொடுப்பேன் என்றும் அதேபோன்று எனக்கு வாக்களித்தபடி ஐபிஎல் போட்டிகளில் எனக்கு வாய்ப்பளித்து என் திறமையை வெளிக்காட்ட வழிவகுத்தார். அதன் மூலமே நான் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறேன். என்னுடைய இந்த வாய்ப்புக்கு முழுக்காரணம் தோனியை தான் கூறுவேன் என்று தீபக் சாகர் கூறியது குறிப்பிடத்தக்கது.