நல்லவேளையாக இந்த ஓய்வு கிடைத்தது. திரும்பி வரும்போது காயத்தில் இருந்து மீண்டு கெத்தா அணிக்கு வருவேன் – சவால் விட்ட இந்திய வீரர்

Deepak-Chahar
- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 29ஆம் தேதி துவங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்தத் தேதிக்குப் பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பது மிகப்பெரும் சந்தேகம்தான். ஏனெனில் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நேரத்தில் இந்த கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனைவரையும் வீட்டிற்குள் இருக்க வைத்துள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று வகையான போட்டிகளில் விளையாடியது. இந்தப் தொடரின் ஒருநாள் போட்டிகளின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த தீபக் சாகர் காயமடைந்தார். அதன்பின்னர் காயத்திலிருந்து மிக கடுமையாக போராடி தற்போதுதான் குணம் அடைந்துள்ளார்.

ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 29ஆம் தேதி திட்டமிட்டபடி தொடங்கியிருந்தால் பல போட்டிகளை அவர் இழந்திருப்பார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாதிக்குமேல் ஆடி இருக்க முடியாது. ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால் தற்போது அந்த நிலைமை ஏற்படவில்லை. இது குறித்து பேசிய தீபக் சாகர் கூறுகையில் :

Chahar-3

நான் மீண்டும் ஆடுகளத்திற்கு வந்து பந்து வீசுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தற்போதைய எண்ணமெல்லாம் உடல் தகுதியுடன் நான் இருக்கவேண்டும். நினைத்த விஷயங்கள் அப்படியே நடந்துவிடும் என்று நம்மால் கூற முடியாது. இந்த நேரத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்துகொண்டிருக்கிறேன். அதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

- Advertisement -

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். மேலும் எனது உடல் தகுதியில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது ஐபிஎல் போட்டி வைக்கப்பட்டுள்ளதால் காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு நேரம் கிடைத்துள்ளது. மார்ச் 29ஆம் தேதி திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடந்து இருந்தால் நான் சில போட்டிகளை தவறவிட்டு இருப்பேன் என்று கூறியுள்ளார் தீபக் சஹர்.

Chahar-1

இதனால் தற்போது வீட்டில் தனது உடற்பயிற்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அவர் தற்போது பூரணமாக தயாராகி உள்ளார். இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் அவர் தனது சிறப்பான பந்துவீச்சை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்திய இடடம்பெற்ற இவர் தனது சிறப்பான பந்துவீச்சை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement