நாம ஜெயிச்சிடுவோம்னு எனக்கு நம்பிக்கை வந்ததே இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் – தீபக் சாகர் பேட்டி

Deepak-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நேற்றைய 2-வது போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் த்ரில்லிங்கான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக தீபக் சாஹர் திகழ்ந்தார். பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் பேட்டிங்கின் போது சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

deepak 1

- Advertisement -

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்றும் இல்லையெனில் தொடரை முடிவு செய்யும் போட்டி அடுத்த போட்டியாக அமையும் என்பதனால் இந்த இரண்டாவது போட்டிக்கான பரபரப்பு நேற்று உச்சத்தில் இருந்தது. இந்திய அணி துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை அவ்வப்போது சீரான இடைவெளியில் எழுந்துவர கடைசி கட்டத்தில் 7 விக்கெட்டுகளை எடுத்து தத்தளித்தது.

அப்போது இந்திய அணி அப்படி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக நிதானமாகவும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக தனது பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

deepak

அவர் அடித்த ரன்கள் அதிர்ஷ்டத்தால் கிடைத்தவை அல்ல. ஒவ்வொன்றும் பிராப்பர் கிரிக்கெட் ஷாட்டுகள் மூலம் வந்தவை. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசியபோது அவர் கூறுகையில் : இந்தத் தருணத்தை விட இந்திய நாட்டிற்காக வெற்றியைத் தேடித் தர சிறந்த தருணம் கிடைக்காது என்று நினைக்கிறேன். ராகுல் சார் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று நான் நினைக்கிறேன்.

deepak

வெற்றிக்கான இலக்கு 50-க்கும் குறைவாக வந்தபோது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. மேலும் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி இலக்கு குறைய குறைய சில ஷாட்களை விளையாட தீர்மானித்து சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்தேன். முக்கியமான நேரத்தில் அந்த ஒரு சிக்சரை அடித்த பின்னர் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் தீபக் சஹர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement