இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின் இதுவரை இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் தற்போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி விட்டு ஓய்வு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் மீண்டும் அணியில் இடம் பெறுவதை நம்பியிருந்தார் தோனி. ஆனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் கிரிக்கெட்டையும் தாண்டி தோனிக்கு பிடித்த விளையாட்டு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கிரிக்கெட் களத்தில் அசத்தும் தோனி பப்ஜி விளையாடுவதிலும் சிறப்பான திறமை கொண்டவர். தனது நுணுக்கமான செயல்பாடுகளின் மூலம் பப்ஜி விளையாட்டிலும் தோனி அசத்துவார்.
தோனியின் இந்த பப்ஜி திறமை குறித்து இந்திய வீரர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான தீபக் சாஹர் தோனியிடம் முன்பு இருந்ததை போன்று பப்ஜி டச் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சாகர் தற்போது ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார். மேலும் ஓய்வு நேரத்தில் பப்ஜி கேம் விளையாடி வருகிறார் .இந்நிலையில் கடந்த முறை தோனி தன்னுடன் பப்ஜி விளையாடும் பொழுது தோனி தடுமாறியதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு தோனி சிறப்பாக விளையாடுவார் ஆனால் தற்போது அவர் விளையாடுகையில் யார் எங்கிருந்து சுடுகிறார்கள் என்பது தெரியாமல் திணறுகிறார் என்று பப்ஜி விளையாட்டு குறித்து குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தோனி ஒரு பப்ஜி பிரியர் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் தோனி மட்டுமின்றி இந்திய அணி வீரர்கள் பலரும் பப்ஜி கேம் பிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.