தொடர்ந்து இரண்டு ஹாட்ரிக் மற்றும் எனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனியே காரணம் – தீபக் சாகர் ஓபன் டாக்

Chahar4
- Advertisement -

நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான கடைசி t20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மட்டுமின்றி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தீபக் சாகர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு நாட்களுக்குள் சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் மீண்டும் ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார்.

Chahar-3

- Advertisement -

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேட்டி தீபக் சாகர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் அதில் சாகர் கூறியதாவது : எப்பொழுதும் எனக்கு சிக்கல் ஏற்பட்டாலும் டோனி என்னிடம் கூறிய ஆலோசனைகளை நான் நினைவில் வைத்துக் கொள்வேன். இந்த சாதனைக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும், தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களே என்னை சிறப்பாக செயல்பட வைக்கின்றன.

பேட்ஸ்மனின் உடல் மொழியை எவ்வாறு கணிப்பது அதற்கு ஏற்ப விக்கெட்டை வீழ்த்தும் பந்துகளை எப்படி வீசுவது என்பது போன்ற சில விடயங்களை எனக்கு சிஎஸ்கே அணியும் தோனியுமே கற்றுக் கொடுத்தனர். இது போன்ற விஷயங்கள் எனக்கு சர்வதேச போட்டியில் பந்து வீசும்போது உதவியுள்ளது. அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தோனியின் தலைமையில் விளையாடி வருகிறேன்.

Chahar-1

அவர் எனக்கு மைதானத்தில் எப்படி பந்து வீசுவது என்று நிறைய முறை சொல்லிக் கொடுத்துள்ளார் மேலும் ஒரு பந்து வீசும் உன் தோனி ஏதாவது சொன்னால் அப்போது எனக்கு நிச்சயமாக விக்கெட் விழும். இந்த அனுபவம் எனக்கு தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் கைகொடுக்கிறது எப்போது சிக்கல் வந்தாலும் தோனி அறிவுரை நினைத்தே நான் பந்துவீசுவேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement