கொரோனா வந்ததால ஜாலி. அப்பாடா எனக்கு டைம் இருக்கு. ரன களத்திலும் ஜாலியாக பேசிய – இந்திய வீரர்

Chahar-1
- Advertisement -

2019ஆம் ஆண்டு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆண்டே என்று கூறலாம். ஏனெனில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் பலவற்றில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு இந்த ஆண்டில் அதிகமாக இருந்தது.

Deepak-Chahar

- Advertisement -

அடுத்தடுத்து வெளிநாட்டு டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர்கள் என அசத்திய இந்திய அணி ஐசிசி நடத்திய 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மட்டுமே ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது. மற்றபடி இந்திய அணி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

அதிலும் குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதில் மிக குறிப்பிடப்பட்ட ஒரு வீரராக டி20 அணியில் விளையாடும் தீபக் சாகரை குறிப்பிடலாம். அவர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

Chahar-3

மேலும் கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டின் போது காயமடைந்த அவர் அதற்கடுத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரேயான தொடரை தவறவிட்டார். மேலும் தற்போது மீண்டும் உடல்நலத்தில் முன்னேறிவரும் அவர் மீண்டும் இந்திய அணிக்கான டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ஆர்வமாக உள்ளார்.

- Advertisement -

அதற்கு தற்போது வழி கிடைக்கும் விதமாக கொரோனாவால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் உலக அளவில் நிறுத்தப்பட்டுள்ளதால் தீபக் சஹர் இந்த இடைவெளியின் மூலம் தான் மீண்டும் சிறப்பாக உடல்நிலையை மெருகேற்றி அணிக்குள் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் :

Chahar

நான் தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி எடுத்து வந்தேன். ஆனால் தற்போது அது மூடப்பட்டு விட்டதால் வீட்டிலேயே என்னுடைய உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன் மேலும் இந்த காலகட்டத்தில் எனது உடல் தகுதியை பராமரித்து மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement