இலங்கை தொடரில் டிராவிட் சார் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான் – தீபக் சாகர் பகிர்ந்த சுவாரசியம்

Deepak
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின்போது புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து மேட்ச் வின்னிங் இன்னிங்சை ஆடி அசத்தி இருந்தார் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது இந்த போட்டியில் வெற்றி பெற முடியுமா ? என்ற நிலையில் களமிறங்கிய தீபக் சாஹர் தனது அபாரமான பேட்டிங் திறமை மூலம் அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தும் காண்பித்தார்.

deepak

- Advertisement -

அதன் பின்னர் தற்போது எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து பயிற்சி பெற்று வரும் தீபக் சாஹர் இலங்கை தொடரில் பயிற்சியாளராக இருந்த டிராவிட் உடன் ஏற்பட்ட உரையாடல் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நாங்கள் இலங்கை தொடருக்காக அங்கு சென்றடைந்ததும் டிராவிட் சார் என்னிடம் வந்து உன்னுடைய வயது என்ன ? என்று கேட்டார். அதற்கு நான் 28 ஆகிறது என்றும் விரைவில் 29 வயது ஆக இருப்பதாகவும் கூறினேன். அதற்கு மீண்டும் என்னிடம் அவர் : நிஜமாகவே அது உன் வயது தானா ? இல்லை கிரிக்கெட்டுக்காக மாற்றிக் கொண்டதா ? என கேட்டார்.

Deepak-1

அதற்கு நான் உடனடியாக : இல்லை சார் என்னுடைய நிஜ வயது அதுதான். என்னுடைய தந்தை விமானப்படையில் வேலை செய்வதால் வயது விவகாரத்தில் எந்த விதத்திலும் தில்லு முல்லு செய்ய முடியாது என்று கூறினேன்.

அவருடைய இந்த கேள்வி எனக்கு சற்று ஆச்சரியமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. அவர் ஏன் இவ்வாறு என்னிடம் கேட்டார் என்று தெரியவில்லை. இருப்பினும் அவரது பயிற்சியின் கீழ் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி உள்ளேன் என தீபக் சாஹர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement