டி20 உ.கோ’யில் ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு புவனேஷ்வரை விட அவரே சரியானவர் – முன்னாள் பாக் வீரர் கருத்து

Rohit Sharma Bhuvneswar Kumar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்வதற்கு ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தயாராகி வருகிறது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய போதிலும் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியுமா என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டும் உலகக்கோப்பையில் ஒருசில வீரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே காயத்தால் விலகியதும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகப் போகிறார் என்பதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கிறது.

Bhuvaneswar Kumar

- Advertisement -

குறிப்பாக பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்துவீசி யாரக்கர் பந்துகளால் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்ற அவர் வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக் கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். இருப்பினும் தற்போது அவர் விலகுவதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உலகக்கோப்பை அணியில் சீனியராக இருக்கும் புவனேஸ்வர் குமார் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தில் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பவராக திகழும் அவரோ கடைசி கட்ட ஓவர்களில் 10 வருடங்கள் விளையாடிய அனுபவத்தை கொஞ்சமும் காட்டாமல் வள்ளலாக ரன்களை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சஹர் சிறந்தவர்:
ஏனெனில் பொதுவாகவே 130 கி.மீ வேகத்தில் மட்டுமே பந்து வீசக்கூடிய அவர் தேய்ந்துபோன பந்தில் கடைசி கட்ட ஓவர்களில் மித வேகத்தில் வீசும்போது பேட்ஸ்மேன்கள் சரமாரியாக அடிக்கிறார்கள். அதிலும் சமீபத்தில் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்த சூப்பர் 4 சுற்றில் 19வது ஓவரில் ஏராளமான ரன்களை வழங்கி வெற்றியை பரிசளித்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த வாரம் மொகாலியில் நடைபெற்ற போட்டியிலும் கொஞ்சமும் முன்னேறாமல் அதே 19வது ஓவரில் மீண்டும் ரன்களை வழங்கினார்.

Deepak Chahar IND

இதனால் பும்ரா இல்லாமல் இவரை வைத்துக் கொண்டு எப்படி உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம் என்ற கவலை நிறைய ரசிகர்ளிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் புவனேஸ்வரை விட தீபக் சஹர் தான் சரியானவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக சாதனை படைத்து உலக கோப்பையில் விளையாட காத்திருந்த தீபக் சஹார் ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்தால் பெரிய பின்னடைவை சந்தித்து தற்போது ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் புவனேஸ்வரை விட அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக பந்து வீசும் திறமையுடன் ஓரளவு பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றுள்ள தீபக் சஹர் உலகக்கோப்பையில் விளையாட சிறந்தவர் எனக்கூறும் கனேரியா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கால சூழ்நிலைகள் ஸ்விங் செய்வதற்கு சாதகமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் புவனேஸ்வர் குமார் தனது பந்து வீச்சுக்கு தண்டனையாக அடி வாங்குவார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர் கடைசி கட்ட ஓவர்களில் சரமாரியாக அடி வாங்குவார். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கடினமான பிட்ச்கள் தான் இருக்கும்”

Kaneria

“எனவே புவனேஸ்வர் குமாரை விட தீபக் சாஹர் தான் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு பொருந்தக்கூடியவர். மேலும் அவர் பேட்டிங்கில் தேவைப்படும் போது ரன்களை அடிப்பார். அதேசமயம் தென்னாப்ரிக்க தொடரில் பும்ராவுக்கு பதில் முஹம்மது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எப்போதுமே நல்ல எனர்ஜியுடன் அணிக்கு தேவையானவற்றை கொடுக்கும் திறமை பெற்றுள்ளார்”

“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான பாடி லாங்குவேஜை பெற்றுள்ள அவர் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை இருகரம் கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிவார்” என்று கூறினார். தற்சமயத்தில் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளதால் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இல்லை என்றாலும் கூட நேரடியாக உலக கோப்பை முதன்மை அணியில் தீபக் சஹர் தேர்வு செய்யப்படுவார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement